திருமண பரிசில் வெடிகுண்டு வைத்து மாப்பிள்ளை பலி...மணமகள் சீரியஸ்...

ஓடிசாவில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்,வெடிகுண்டை வைத்து திருமண  பரிசாக புதுமண தம்பதிகளுக்கு கொடுத்துள்ளனர்.

ஓடிசா மாநிலம் பொலிங்கர் மாவட்டம் பட்நாகர் நகரைச் சேர்ந்தவர் சவுமியா சேகர் சாஹூ.கடந்த 18ம் தேதி, இவருக்கும் ரீமா சாஹூ என்பவருக்கும் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த பிறகு, பரிசு பொருட்களை  ஒவ்வொன்றாக மணமகனும் மண மகளும் உடன் ஒரு பாட்டியும் சேர்ந்து,பரிசு  பொருட்களை பிரித்து பார்த்து ரசித்து உள்ளனர்

அப்போது அடுத்த பரிசாக உள்ள பொருளை மணமகன் ஆர்வமாக எடுத்து பிரித்து பார்க்க முயன்ற போது, திடீரென அதிக சப்தத்துடன் வெடித்து சிதறியது.அதில் மணமகன் பெருத்த காயத்துடன்,சம்பவ  இடத்திலேயே பலி ஆனார்.

இந்த விபத்தில் மாப்பிள்ளையின் பாட்டியும் உயிரிழந்தனர்..படுகாயமடைந்த மணமகளும் உறவினர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் திருமண நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும்,உறவினர்களும் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்