Asianet News TamilAsianet News Tamil

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை !! எடப்பாடி அதிரடி !!

புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் வீர மரணம் அடைந்த அரியலூர்  சிவசந்திரன் மற்றும் தூத்துக்குடி சுப்ரமணியன்  ஆகியோரின் குடும்பத்தில்  ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
 

govt job for 2 crpf caders
Author
Chennai, First Published Feb 16, 2019, 1:01 PM IST

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வீர்கள் அணிவகுத்துக் சென்று கொண்டிருந்தபோது அவர்களது வாகனத்திம் மீது  தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

govt job for 2 crpf caders

இந்த தாக்குதலில் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவசந்திரன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த  சுப்ரமணியன் என்ற இருவரும் உயிரிழந்தனர்.

இதனை உறுதிப்படுத்திய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

govt job for 2 crpf caders

அரியலூர் சிவசந்திரனுக்கு தாய் – தந்தை  உள்ளனர் அவருக்கு திருமணம் ஆகி மனைவியும் 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர், மேலும் சிவசந்திரனின் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். 

இதே போல் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தூத்துககுடி சுப்ரமணியனுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. 

govt job for 2 crpf caders
வீரமரணம் அடைந்த அவர்கள் இருவரின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு  அரசு வேலை வழங்கப்படும் எனவும்  அறிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios