cji of india: உச்ச நீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி யார்? யுயு லலித்தின் பரிந்துரை கேட்கிறது மத்திய அரசு
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதுகுறித்து பரிந்துரை செய்யுமாறு தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித்திடம் மத்திய அரசு கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதுகுறித்து பரிந்துரை செய்யுமாறு தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித்திடம் மத்திய அரசு கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட யுயு லலித்தின் பதவிக்காலம் 74 நாட்கள்தான். அவரின் பதவிக்காலம் வரும் நவம்பர் 8ம் தேதியுடன் முடிகிறது. அதன்பின் புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்பதால், அவரின் பரிந்துரையை மத்திய அரசு கேட்டுள்ளது
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் சார்பில் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமிப்பது குறித்து பரிந்துரைகள் வழங்குமாறு தலைமை நீதிபதிக்கு அமைச்சகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி நியமனம் தொடர்பாக முதல்முறையாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் செயல்முறை குறிப்பானையின்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் மூத்தநீதிபதியாகஇருப்பவர்தான் தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டும். இந்த செயல்முறை குறிப்பாணை, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பரிந்துரை ஆகியவற்றைக் குறிக்கிறது
அந்த வகையில் பார்த்தால் உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருப்பவர் டிஒய் சந்திரசூட். செயல்முறை குறிப்பாணையின்படி பரிந்துரைக்கப்பட வேண்டுமென்றால், அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் பெயரை யுயு லலித் பரிந்துரைப்பார்.
ஒருவேளை ஒய்வி சந்திரசூட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால் அவரின் பதவிக்காலம் 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதிவரை நீடிக்கும். வரும் நவம்பர் 9ம் தேதி புதிய தலைமை நீதிபதியாக அவர் பதவி ஏற்க வேண்டியதிருக்கும்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக வருபவர் 65 வயதில் ஓய்வு பெற்றுவிட வேண்டும் உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதி ஓய்வு காலம் வயது 62 ஆகும்.
இந்த ஆண்டு மட்டும் நீதித்துறையில் மட்டும் 153 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் மும்பை உயர் நீதிமன்றத்துக்கு மட்டும் இன்று 6 கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்
மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் திபன்கர் தத்தாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 30 ஆக உயரும், 34 நீதிபதிகள் வரை இருக்கலாம்.
புதிய தலைமை நீதிபதியை நியமிக்கும் பணியை இந்தவாரம் அல்லது அடுத்தவாரத்தின் தொடக்கத்தில் மத்திய அரசு தொடங்கிவிடும்.