Gold price increases in Deepavali - shocking information

வரும் தீபாவளிக்குள் ஒரு சவரன் தங்கம் 34 ஆயிரம் ரூபாயை தாண்டும் வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த தகவல்
பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக கண்ணா எண்ணெய் அதிகமான விலை கொடுத்து
வாங்கும் பொருட்டு டாலரின் தேவை அதிகரிக்கிறது. அதிக அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அமெரிக்க டாலரின் இன்றைய மதிப்பு 67.53 காசுகளாக உள்ளது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் சரிவின் எதிரொலி தங்கத்தின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜூன் மாதம் துவக்கத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.260 அதிகரித்துள்ளது. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.23,760 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ.23,496 என்றிருந்த நிலையில் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலை அப்படியே தொடருமானால், வருகின்ற தீபாவளிக்குள் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.34,000 ஆக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று சந்தை
வல்லுநர்கள் கணித்துள்ளனர். தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது பொதுமக்களை கவலைக்குள்ளாக்கி உள்ளது.