Asianet News TamilAsianet News Tamil

"இரண்டுமுறை தோற்று இறுதியில் வென்றிருக்கிறேன்" - வரலாற்றுச் சாதனையோடு தாயகம் திரும்பிய தங்க மங்கை பி.வி.சிந்து பேட்டி

உலக பேட்மிட்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி சிந்து இந்தியா திரும்பினார் .  அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .

gold medalist p.v.sindhu returned back to india
Author
India, First Published Aug 27, 2019, 11:35 AM IST

உலக பேட்மிண்டன் போட்டி வரலாற்றில் சாம்பியன் பட்டத்தை இந்தியா இதுவரை வென்றதில்லை . அந்த வரலாற்று சாதனையை பி.வி.சிந்து நிகழ்த்தியிருக்கிறார் .
 gold medalist p.v.sindhu returned back to india
இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி  இந்திய வீராங்கனை சிந்து தங்கப்பதக்கம் தட்டிச்சென்றார் . இதன் மூலம் இந்த போட்டியில் வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமை அவரை சேர்ந்திருக்கிறது .

சுவிட்சர்லாந்தில் இருந்து இந்தியா திரும்பிய பி.வி சிந்துவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை வரவேற்க நூற்றுக்கணக்கானோர் திரண்டனர் . அவர்களின் உற்சாக வாழ்த்து மழையில் நனைந்தபடி வந்தார் பி.வி.சிந்து .

gold medalist p.v.sindhu returned back to india

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்  இந்தியர் என்று கூறுவதில் பெருமை அடைவதாகவும்  பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார் . நாட்டுக்காக பல பதக்கங்களை வென்றிருப்பதை குறிப்பிட்ட அவர் தன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்த ரசிகர்களுக்கும், வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக நெகிழ்ச்சியாக கூறினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios