ஹரியானா மாநிலத்தில் 5 வயது சிறுமியை கொடூரமாக கற்பழித்து கொலை செய்த கொடூரனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ஹரியானா மாநிலத்தில் ஹிசார் மாவட்டத்தில் உள்ள உக்லானா கிராமத்தில் நேற்று இரவு வீட்டில் தாயாருடன் தூங்கிய சிறுமி, காலையில் காணவில்லை. வீடு மற்றும் வீட்டின் அருகே உள்ள பகுதிகளில் சிறுமியை தாய் தேடியுள்ளார். அக்கம்பக்கத்தினரும் அப்பகுதியில் சிறுமியை தேடியுள்ளனர்.

அப்போது அப்பகுதியில் இருந்த குளத்தின் அருகே சிறுமியின் உடல் முழுதும் ரத்த காயங்களுடன் பிறப்புறுப்பில் குச்சி ஒன்று செருகப்பட்டு இறந்த நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் சிறுமி கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர், பிறப்புறுப்பில் தாக்கப்பட்டதால்தான் சிறுமி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். உடல் முழுதும் நகக் கீறல்கள் இருப்பதையும் மருத்துவர் உறுதி செய்துள்ளார்.

இதையடுத்து 5 வயது சிறுமியை இரக்கமில்லாமல், கற்பழித்து கொலை செய்த கொடூர கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.