பாஜக மீண்டும் ஆட்சி பொறுப்பு ஏற்ற 100 நாட்களில் இந்தி பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஜிடிபி 5 சதவீமாக குறைந்தது. மேலும் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் குறைந்து போனது.

இதன் காரணமாக மோட்டர் வாகன உற்பத்தி குறைந்து போனது. மேலும் சிறுகுறு தொழில்கள் நசிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பொருளாதார மந்தநிலை குறித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர்  சக்திகாந்த தாஸ் முதன்முதலாக வாய்திறந்தார். இது குறித்து செய்தியாள்களிடம் பேசிய அவர், முதல் காலாண்டு முடிவு, முற்றிலும் எதிர்பாராதது என்றார்.

கடந்த சில மாதங்களாக மந்த நிலை காணப்படுவதால், பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை குறைத்து வருகிறது.தற்போதைய பொருளாதார நிலையை சரிசெய்வது என்பது, தொடர்ச்சியான ஒன்றாகும். 

கட்டுமான தொழிலுக்கு சலுகை, ஏற்றுமதி ஊக்கத்தொகை, வங்கிகள் ஒருங்கிணைப்பு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வாகன துறைக்கு ஊக்கச் சலுகை அறிவிப்புகள் என, சில நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது.

அடுத்து, விவசாயத்தை சந்தைப்படுத்துதல் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பாக, அரசாங்கத்திடமிருந்து சில நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

அனைத்து முன்னேறிய நாடுகளின் பொருளாதாரம், இரண்டாவது காலாண்டில், முதல் காலாண்டை விட குறைவாக உள்ளது. இதற்காக, உலக மந்த நிலையை வைத்து, நமது நிலையை நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை என தெரிவித்த சக்திகாந்த தாஸ். இருப்பினும், உலகளாவிய மந்த நிலை, வளர்ச்சியை பாதிக்கிறது.இரண்டாவது காலாண்டில், பல்வேறு காரணிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ரிசர்வ் வங்கி பகுப்பாய்வு செய்து, மதிப்பீடு செய்யும் என தெரிவித்தார்.