கேட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு - இப்போதே டவுன்லோட் செய்யலாம்!

பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான 2023ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு ஹால் டிக்கெட் இன்று, செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது.

GATE 2023 Admit Card Live Updates: GATE admit cards today on gate.iitk.ac.in

இந்த ஆண்டு நடைபெறவுள்ள கேட் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் gate.iitk.ac.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கான்பூர் ஐஐடி அறிவித்துள்ளது.

மத்திய அரசு எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் முதலிய பல்வேறு பொறியியல் மேற்படிப்புகளுக்காக  Graduate Aptitude Test in Engineering என்ற கேட் நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் நாட்டின் தலைசிறந்த ஐஐடி, ஐஐஎஸ்சி ஆகிய கல்வி நிறுவனங்களில் மேல் படிப்பைத் தொடரலாம்.

இந்த் தேர்வு எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் தேர்வு ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு ஐஐடி நிறுவனம் கேட் தேர்வை நடத்தும்.

SBI CLERK 2022 RESULT: SBI கிளார்க் முதனிலைத் தேர்வு முடிவு வெளியீடு!மெயின் அட்மிட் கார்டை டவுன்லோடு செய்யலாம்

வரும் பிப்ரவரியில் 4, 5, 11 மற்றும் 12 ஆகிய நான்கு நாட்களில் கேட் தேர்வு நடைபெற உள்ளது. கான்பூர் ஐஐடி நிறுவனம் இவ்வாண்டுக்கான கேட் தேர்வு நடத்தும் பொறுப்பைப் பெற்றிருக்கிறது.

100 மதிப்பெண்களுக்கான இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் என 27 பாடப் பிரிவுகளில் நடக்கும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios