சமையில் சிலிண்டர் விலை குறைப்பு !! எவ்வளவு தெரியுமா ?

https://static.asianetnews.com/images/authors/7c75b3b3-3057-52ee-ad74-0f9554f16f46.jpg
First Published 1, Feb 2019, 7:59 AM IST
gas cylinder price reduce
Highlights

சமையல் சிலிண்டர் விலையை ரூ.1.46 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இதே போல் மானியம் இல்லாத சிலிண்டரின் ரூ.30 வரை குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் கியாஸ் சந்தை விலை மீது விதிக்கப்பட்ட வரியின் விளைவால் தற்போது விலை குறைந்து இருக்கிறது. 

அதற்கு ஏற்ப 14.2 கிலோ கியாஸ் சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி மானியத்துடன் கூடிய சிலிண்டருக்கு ரூ.1.46 குறைந்து உள்ளது. மானியம் இல்லாத சிலிண்டருக்கு ரூ.30 குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. 

சென்னையில் தற்போது ரூ.704.85 ஆக இருந்த 14.2 கிலோ மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை, ரூ.674.85 ஆகவும், மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலை ரூ.482.88-ல் இருந்து ரூ.481.42 ஆகவும் குறைந்து உள்ளது. 

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து 3-வது முறையாக குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது

loader