Gang rape in maharastra prednent lady by 8 men

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி கணவனைக் கட்டிப்போட்டு 8 மாத கர்ப்பிணி ஒருவரை 8 பேர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் சாங்க்லி மாவட்டத்தில் தஸ்வாகன் பகுதியில், 20 வயதான 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் அவரது கணவருடன் சேர்ந்து ஒரு வணிக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக துர்ச்சி படாவிற்கு சென்றிருந்தார். அங்கு உள்ள ஒரு ஓட்டலில் அவர்கள் தங்கியிருந்தனர்.

அப்போது அங்கு இருந்த மானே என்ற பணியாளர் அந்தப் பெண்ணின் கணவருக்கு வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு 20 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். மேலும் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து கணவனும் அந்த கர்ப்பிணிப் பெண்ணும் அவர்கள் சொன்ன இடத்தை அடைந்தபோது மானேவும் அவரது நண்பர்களும் குழாய்களையும், குச்சிகளையும் கொண்டு அவர்களை தாக்கி உள்ளனர்.

அவர்களிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை பறித்து கொண்டனர். பின்னர் அவர்கள் கணவரை கட்டி, அவரது வாகனத்தின் உள்ளே அடைத்தனர். பின்னர் அந்த பெண்ணை மானே தனது 7 நண்பர்களுடன் கூட்டாக கற்பழித்துள்ளனர்.

பின்னர் அவர்களை அந்த கும்பல் மிரட்டி, நாங்கள் இங்கு செல்வாக்கு மிகுந்தவர்கள் எங்களை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என கூடிற விரட்டிவிட்டுள்ளனர்.

இதையடுத்து அந்த தம்பதியர் தஸ்காவன் போலீஸ் நிலையத்தில் இரு குறித்து புகார் அளித்தனர்.

இது தொடர்பாக முகுந்த் மானே, சாகர், ஜாவேத் கான், வினோத் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

இது குறித்து மகாராஷ்டிரா மாநில பெண்கள் ஆணைய தலைவர் விஜய ராகட்கர் சாங்க்லி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டுக்கு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதி உள்ளார்.