இந்தியாவில் தற்போது இணையம் வேகம் 4ஜியில் மட்டுமே இருக்கிறது. மற்ற நாடுகள் 5ஜி, 6ஜி என்று முன்னேறிக் கொண்டு இருக்கும் போது, நாம் இப்போதுதான் 4ஜியில் இருக்கிறோம்.

அதிலும் 4ஜி பயன்பாட்டில் குறைவான வேகத்தில் இணையம் கிடைக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இந்த நிலையில்தான், இனி நோ டென்ஷன் என்று சொல்ல வந்து இருக்கிறது இஸ்ரோவின் தி பிக் பேர்ட் சாட்டிலைட்.

விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட ஜிசாட் 11 என்ற  சாட்டிலைட் இஸ்ரோ உருவாக்கிய ஜிசாட் 11 சாட்டிலைட் தான் . தி பிக் பேர்ட் சாட்டிலைட் என்று அழைக்கப்படுகிறது.

இதுதான் இஸ்ரோ உருவாக்கியதிலேயே மிகப்பெரிய சாட்டிலைட். அதிக எடை கொண்ட சாட்டிலைட். இதன் எடை 5854 கிலோ ஆகும். இதற்கு முன் 6 டன்களில் எல்லாம் இஸ்ரோ சாட்டிலைட் உருவாக்கியதே கிடையாது.

பிரான்சின் ஒரு பகுதியான பிரென்ச் கயானா பகுதியில் இருந்து இந்த சாட்டிலைட் விண்ணில் ஏவப்பட்டது. ஏரியானாஸ்பேஸ் ஏரியான் - 5 என்று பிரென்ச் ராக்கெட் மூலம் இந்த சாட்டிலைட் விண்ணில் இன்று அதிகாலை நிலைநிறுத்தப்பட்டது.

இதனுடன் தென்கொரியாவின் ஜியோ கோம்ப்சாட் 2ஏ என்ற சாட்டிலைட்டும் விண்ணில் ஏவப்பட்டு இருக்கிறது. இந்த சாட்டிலைட் காரணமாக இந்தியாவின் இணைய வேகம் தாறுமாறாக அதிகரிக்க போகிறது.

ஆம், இந்த சாட்டிலைட் மூலம் 14-16 ஜிபி வர இணைய வேகம் அளிக்க முடியும். இதனை டிராய் கட்டுப்படுத்தும், இந்த  வேகம் போக நமக்கு 5 ஜிபி வேகம் வரை, அதாவது நொடிக்கு 30 எம்பி வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இது குறித்து கவர்ச்சிகரமான அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

இந்த சாட்டிலைட்டால் இந்தியா முழுக்க இணைய வேகம் ஒரே மாதிரி இருக்கும். டெல்லியில் கிடைக்கும் அதே வேகம், மார்த்தாண்டத்தில் கிடைக்கும், அந்தமானிலும் கிடைக்கும்.

இது இந்திய இணைய உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்த போகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள். இதில் மொத்தம் 40 டிரான்ஸ்பாண்டர்கள் இருக்கிறது. கேயு-பேண்ட் மற்றும் கேஏ-பேண்ட் வகை அலைகளை இது உருவாக்கும்.

இதுதான் இனி நம்முடைய இணைய உலகின் வேகத்தை நிர்ணயிக்கும். இதன் காரணமாக தற்போது இந்தியாவின் இணைய வேகம் சிங்கப்பூர், ஸ்வீடன் மற்றும் சீனாவிற்கு இணையாக இருக்க வாய்ப்புள்ளது.