கொரோனாவை கட்டுப்படுத்த டெல்லியில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். 

கொரோனாவை கட்டுப்படுத்த டெல்லியில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். ஓமைக்ரான் என்னும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதில் இருந்து உலகின் பல நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1500ஐ கடந்துவிட்டது. உண்மையான பாதிப்பு இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றே அஞ்சப்படுகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. இதனிடையே தலைநகர் டெல்லியில் மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் சுமார் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மருத்துவமனையிலேயே பலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நேற்று மட்டும் 4,099 பேருக்கு கொரோனா உறுதியானது. அதேபோல பாசிட்டிவ் விகிதமும் 6.46 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதை அடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த டெல்லியில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். அதன்படி, வெள்ளி இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரையிலான முழு ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகள், கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.இதற்கிடையில் ஒமைக்ரான் தொற்று பரவலும் வேகமாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக, கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுக்குறித்த அவரது அறிவிப்பில், சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில்,கொரோனா பரவலை தடுக்க வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில், டெல்லியில் கடந்த 8-10 நாட்களில் சுமார் 11,000 கொரோனா நேர்மறை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் சுமார் 350 நோயாளிகள் மருத்துவமனையில் உள்ளனர் என்றும், 124 நோயாளிகளுக்கு மட்டுமே ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது மற்றும் 7 பேர் வென்டிலேட்டரில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பரவலைத் தடுக்க சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் டெல்லியில் ஊரடங்கு உத்தரவை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே, அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோர் தவிர அனைத்து அரசு அதிகாரிகளும் வீட்டில் இருந்தே பணியாற்றுவார்கள் எனவும், தனியார் அலுவலகங்களில் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.