fuel price reduced in India

கடந்த 16 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை வாகன ஓட்டுனர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் வாகனங்களில் பயணம் செய்யும் பொது மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து, உயர்ந்து வரும் இந்த எரிபொருள் விலையை கட்டுப்படுத்தக் கோரி அரசியல்வாதிகளும், பொதுமக்களும் குரல் எழுப்பியிருந்தனர். தினமும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்று நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

16 நாட்களுக்குப் பிறகு இன்று நியமிக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் சரிவு காணப்படுகிறது. ஆனாலும் அதனால் பெரிய அளவிலான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இதை தொடர்ந்து இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 63 பைசா குறைந்து 80.80 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 60 பைசா குறைந்து 72.58 ரூபாயாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறது.