பொதுவாக மனிதாபிமானம் எல்லாம் செத்துவிட்டது என்று சிலர் உளறித் திரிவார்கள். சில நேரங்களில் அது உண்மையுங்கூட. பக்கத்து வீட்டில்  ஒருவர் உயிரிழந்தாலும், சோத்து மூட்டையைக் கட்டிக் கொண்டு வேலைக்குச் செல்வதை பார்த்திருக்கிறோம்.

இதே போல் சாலையில் யாராவது அடிபட்டுக் கிடந்தாலும் திருப்பிப் பார்க்காமல் செல்லும் பலரையும் பார்த்திருக்கிறோம். ஆனால் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாத அரக்கச் செயல் ஒன்று கார்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடகாவில் கலாபுர்கி மாவட்டத்தின் புறநகர் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் நேற்று மாலை இளைஞர்கள்  சிலர் குளிக்க சென்றுள்ளனர்.

குளித்துக்கொண்டிருக்கும்போது ஜாபர் என்பவர்  கரைக்கு நீந்தி வர முயற்சித்தார். ஆனால், நீந்த இயலாமல் நீரில் தத்தளித்தார். 

கரையில் நின்ற அவரது நண்பர்கள் அவரை பார்த்து ரசித்தனர்.அதன் பின் தான் மூழ்குவதை உணர்ந்த ஜாபர் கையை தண்ணீரின் மேற்பரப்பில் உயர்த்தி நண்பர்களை உதவிக்கு அழைத்தார். 

ஆனால், நண்பருக்கு உதவ முன்வராமல் அவர் மூழ்குவதை வீடியோவாக பதிவு செய்தனர் நண்பர்கள். . ஆனால் , நீரீல் மூழ்கிய ஜாபர் மூச்சுத்திணறி, பரிதாபமாக உயிரிழந்தார்.இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் நண்பர்களை அங்கிருந்து அடித்து விரட்டிவிட்டு நீரில் முழ்கிய ஜாபரின் பிணத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.