பெண்களுக்கு நைட் ஷிப்ட் போடாதீங்க.. உ.பி. அரசு வெளியிட்ட புது கட்டுப்பாடுகள்..!

உத்திர பிரதேச மாநிலம் முழுக்க பெண்கள் இரவு நேர பணி செய்ய அனுமதிக்கப்படக் கூடாது என தெரிவித்து இருக்கிறார்.

Free Transport Among New Rules For Women Working Late In UP

பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழலை ஏற்படுத்தித் தரும் நோக்கில் உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு புது உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறார். அதன்படி உத்திர பிரதேச மாநிலம் முழுக்க பெண்கள் இரவு நேர பணி செய்ய அனுமதிக்கப்படக் கூடாது என தெரிவித்து இருக்கிறார்.

“ஆலைகளில் பெண் ஊழியர்களை இரவு 7 மணியில் இருந்து காலை 6 மணி வரை அவரது எழுத்துப்பூர்வ அனுமதியின்றி  பணியில் ஈடுபடுத்த கூடாது. இதுபோன்ற நேரங்களில் பணியாற்றும் பெண்களுக்கு இலவச போக்குவரத்து, உணவு மற்றும் போதிய பாதுகாப்பு உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும்,” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பணி நீக்கம்:

இத்துடன், இரவு 7 மணியில் இருந்து காலை 6 மணி வரை பணியாற்ற மறுக்கும் பெண்களை பணியில் இருந்து நீக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலத்தில் அனைத்து மில் மற்றும் தொழிற்சாலைகளில் பெண்களுக்கு பணி சூழலில் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் நோக்கில் இந்த விதிமுறைகளை அமல்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

“பணி செய்யும் இடத்தில் பெண்களுக்கு பாலியால் ரீதியாலன அத்துமீறல்களை தடுத்து, பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழலை ஏற்படுத்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு உரித்தானது. மேலும் இந்த அரசாணை பெண் ஊழியர்களுக்கு பணி இடத்தில் ஏற்படும் பாலியால் ரீதியிலான அச்சுறுத்தல்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்,” என குறிப்பிடப்பட்டு உள்ளது. 

உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தலில்  2வது முறையாக வெற்றி பெற்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநிலம் முழுக்க பெண்கள் வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பான பணிச் சூழலை ஏற்படுத்தும் வகையில், தொழிற்சாலை மற்றும் மில்கள் என பெண்களை இரவு நேரத்தில் பணியில் ஈடுபடுத்த கூடாது என அம்மாநில  அரசு அரசு சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios