பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் முஷரப்பை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக  அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டார். 

பிரதமாக பொறுப்பேற்ற, 20 மாதங்களிலேயே பதவியை இழந்து, எதிர்க்கட்சித் தலைவரானார். மீண்டும் 1993-ம் ஆண்டு இரண்டாவது முறையாகப் பிரதமராகி மீண்டும்1996-ம் ஆண்டு பதவியை இழந்தார். 

1988 ஆம் ஆண்டு துபாய்க்கு சென்று பின்னர் 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவிருந்த பொதுத்தேர்தலில் கலந்து கொள்ள நாடு திரும்பினார். அப்போது பெனாசிர் டிசம்பர் மாதம் ராவல்பிண்டி நகரில், மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

இப்படுகொலையில் தொடர்புடையதாக தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மற்றும் 2 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் நேற்று ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாதத் தடுப்பு மையத்தில் இவ்வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததது. 

இதைதொடர்ந்து இன்று தீர்ப்பு வெளியானது. அதில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் முஷரப்பை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக  அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முஷரப்பின் சொத்துக்களை முடக்கி வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.