Former PM Vajpayee admitted to hospital
உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய், உடல்நலக் குறைவு காரணமாக நீண்ட காலமாக அரசியலில் இருந்து விலகி உள்ளார்.
இது வழக்கமாக நடைபெறும் மருத்துவ பரிசோதனை என்றும், சோதனை முடிந்த பிறகு அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மருத்துவமனையின் மூத்த மருத்துவரான ரண்டீப் குலேரியாவின் நேரடி கண்காணிப்பின்கீழ் வாஜ்பாய்-க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
