பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்பட பல்வேறு கோரிக்களை வலியறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் மைதனாத்தில், தமிழக விவசாயிகள் கடந்த 23 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் சங்க தலைவர் அய்யா கண்ணு தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கல்லூரி மாணவர்கள், சமூக நல அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பல மாவட்டங்களில், டெல்லியில் நடத்தப்படும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அங்குள்ள விவசாயிகளும் அடையாள போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையொட்டி நேற்று உச்சநீதிமன்றம், விவசாயிகளுக்கான கூட்டுறவு வங்கிகளில் உள்ள கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று காலை விவசாயிகள் சாலையில் உருண்டு புரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்ட குழு தலைவர் அய்யாக்கண்ணுவுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

‘உடனடியாக அவரை மீட்டு, அதே பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அய்யாகண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.