Former cricketer Sreesanth Video Speech

உலகத்தில் ஒரே தல அஜித் அண்ணாதான் என்றும், மற்றவர்கள் எல்லாம் அவருக்கு கீழேதான் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தி கூறியுள்ளார். அவரது இந்த பதிவுக்கு அஜித் ரசிகர்கள் வரவேற்பை அளித்தாலும், தோனி ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட்டில் இருந்து வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் தற்போது தனது வாழ்க்கைப் பாதையை மாற்றிக் கொண்டுள்ளார். ஆல்பம், சினிமா என மாற்றிக் கொண்டுள்ளார். 

கிரிக்கெட்டில் இருந்து அவர் தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளதால், ஏதாவது ஒரு துறையில் பிரபலமாக வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில், ஸ்ரீசாந்த் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது. 

ஸ்ரீசாந்த், அந்த வீடியோவில் நான் எப்போதும் ஒரு தல தான் இருப்பதாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார். நாட்டில் உள்ள ஒரே தலை அஜித் மட்டும்தான் என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், உலகத்தில் ஒரே தல அது நம்ம அஜித் அண்ணாதான். மற்றவர்கள் எல்லாரும் அதுக்கு கொஞ்சம் கீழேதான். ஸ்ரீசாந்த் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது. அவரது இந்த வீடியோ பதிவு, அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும், தோனி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தோனி ரசிகர்கள், சூதாட்ட வழக்கில் சிக்கிய ஸ்ரீசாந்தை காப்பாற்ற தோனி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இதன் காரணமாக அதிருப்தியில் இருந்த ஸ்ரீசாந்த் தற்போது தோனியை பழிவாங்கும் விதமாக பேசியுள்ளதாகவும் குற்றம் கூறி வருகின்றனர்.