2017 ஆம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு விதிகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் வருமான வரித்துறை செலுத்தக்கூடிய ஒரு நபரை கொண்ட குடும்பத்திற்கு ரேஷன் பொருட்கள் வழங்க கூடாது எனவும், தொழில் வரி செலுத்துபவர்களை உறுப்பினராக கொண்ட குடும்பத்திற்கும் ரேஷன் பொருட்கள் வழங்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள பெரு விவசாயிகள் குடும்பத்திற்கு ரேஷன் பொருட்கள் வழங்ககூடாது எனவும், மத்திய மாநில அரசு ஊழியர்கள் குடும்பத்திற்கு ரேஷன் பொருட்கள் வழங்ககூடாது எனவும் குறிப்பிடபட்டுள்ளது.

மேலும் நான்கு சக்கர வாகனம் வைத்துள்ள குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கக்கூடாது எனவும் பொதுவிநியோக திட்டத்தில் இருந்து குடும்பங்களை நீக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேசன் பொருட்கள் வழங்கப்படும் முன்னுரிமை குடும்பங்களை கண்டறிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

அன்னப்பூர்ணா திட்ட பயனாளிகளை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

அனைத்து அத்தியோதயா அன்னயோஜனா குடும்பத்தினருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளை குடும்பத்தலைவராக கொண்ட குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.