மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் உள்ள பேக்கரி ஒன்றில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
