தெலங்கானா விரைவு ரயிலில் இன்று காலை சென்றுக்கொண்டிருந்த போது திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீப்பிடித்ததை உரிய நேரத்தில் கண்டறிந்து ரயிலை நிறுத்தியதால் பெரும் உயிர் தேசம் தவிர்க்கப்பட்டது. 

அரியானா மாநிலம் அசோதி பல்லப்கர் பகுதியில் இன்று காலை தெலுங்கானா எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 12723) சென்றுகொண்டிருந்தது. அப்போது, காலை 7.43 மணிக்கு ரயிலின் 2 பெட்டிகள் திடீரென தீப்பற்றியது. இதைக் கண்ட ஓட்டுநர், உடனடியாக ரயிலை நிறுத்தினார். அதிலிருந்த பயணிகள் பதற்றத்துடன் வெளியேறினர்.

 

இதுதொடர்பாக உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தின் காரணமாக பயங்கர புகை எழுந்ததால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து கொண்டதால் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ரயிலின் 9-வது பெட்டியில் இருந்த சக்கரத்தின் பிரேக் பகுதியில் தீப்பிடித்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. தீப்பிடித்ததை உரிய நேரத்தில் கண்டறிந்து ரயிலை நிறுத்தியதால் பெரும் உயிர் தேசம் தவிர்க்கப்பட்டது.