மாதம் ரூ.15 ஆயிரத்திற்கும் கீழ் ஊதியம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய மெகா ஓய்வூதியத்திட்டம் ஏற்படுத்தப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2019- 2020 நிதி ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை பொறுப்பு நிதியமைச்சர் பியூஷ் கோயல் தற்பொழுது தாக்கல் செய்து வருகிறார். அவர் தனது பட்ஜெட் உரையில், மாதம் ரூ.15 ஆயிரத்திற்கும் கீழ் ஊதியம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய மெகா ஓய்வூதியத்திட்டம் ஏற்படுத்தப்படும். 60 வயதுக்கு மேல் மாதம் ரூ.3000 ஓய்வூதியமாக வழங்கப்படும். நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 2% வட்டி மானியம் வழங்கப்படும். கடனை திருப்பி செலுத்தும் சமயத்தில் மேலும் 3% மானியம் வழங்கப்படும். கூடுதலாக 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.

இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 6 கோடி இணைப்புகள் இதுவரை தரப்பட்டுள்ளன. கால்நடை, மீன்வளர்ப்பு துறையில் கடனை உரிய காலத்தில் செலுத்துவோருக்கு 3% வட்டி சலுகை. மீனவர்களின் நலனுக்காக மீன்வளத்துறை என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்படும். விவசாயிகளுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும்.

 

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக்கடன்களுக்கு 3% வரை வட்டி மானியம் வழங்கப்படும். பொருளாதார நலிந்த பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கல்வி நிறுவனங்களில் இடங்கள் அதிகரிக்கப்படும். ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும். முத்ரா யோஜனா திட்டத்தில் பதிவு செய்த பெண்களில், 70 சதவீதம் பேர் சுய தொழில் தொடங்கி உள்ளனர். நிரந்தரமாக ஓரிடத்தில் தங்காத மக்களுக்கு சமூக நலத்துறை கீழ் தனி நலவாரியம் அமைக்கப்படும். முறைப் படுத்தப்பட்ட தொழில் துறையில் மாதாந்திர ஓய்வூதியம் ரூ 3000ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.