வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் காதலனை வரவழைத்து ரூமில் உல்லாசமாக இருந்த சமயத்தில் திடீரென தாய் வந்ததால் அதிர்ச்சியடைந்த மகள் மாடியில் கீழே குதித்ததால் கால் முறிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மகாராஷ்டிர மாநிலம் மும்பை குர்லா பாயில் பஜார் பகுதியில் உள்ள கட்டிடத்தின் முதல் தளத்தில் ரேஷ்மி குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ரேஷ்மியின் வீட்டில் யாரும் இல்லை. ரேஷ்மியின் தாய் உறவினர் வீட்டிக்கு சென்றுவிட்டார். தந்தை வேலைக்கு சென்றுள்ளார். தம்பியும், தங்கையும் பள்ளிக்கு சென்றுள்ளனர். 

இந்நிலையில், வீட்டில் யாருமே இல்லாத நேரத்தில் ரேஷ்மி தனது காதலன் சுனிலை போன் செய்து வரவழைத்துள்ளார். இதனையடுத்து, காதலி ரேஷ்மியும், காதலன் சுனிலும் ரூமுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, உறவினர் வீட்டுக்கு சென்ற தாய் திடீரென வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, இருவரும் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தாய் நேரில் பார்த்த அதிர்ச்சியில் மகள் முதல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில்,  ரேஷ்மியின் கால் முறிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுதொடர்பாக ரேஷ்மியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பலாத்காரம், அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.