உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் இப்போது மொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவின் பக்கம் திரும்பியிருக்கிறது ,  காரணம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்  என்ற மருத்துதான்,  மலேரியாவுக்கு பயன்படுத்தப்பட்ட இந்த  மருந்து தற்போது கொரோனா சிகிச்சைக்கு நல்ல பலன் அளிக்கிறது என்பது தான் காரணம் ,  இந்த  ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்  மருந்தை உலக அளவில் அதிகம் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய கேந்திரமாக இந்தியா உள்ளது,  அமெரிக்கா ,  ஜெர்மனி ,  பிரிட்டன் ,  ஸ்பெயின் ,  இங்கிலாந்து ,  இஸ்ரேல் ,  என 40க்கும் அதிகமான நாடுகள் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை  அனுப்பி வைக்கும்படி இந்தியாவிடம் கையேந்தி நிற்கின்றனர் .  மருந்து ஆராய்ச்சியில் இந்தியாவை இந்த அளவிற்கு தலை நிமிர வைக்க  ஒரு மாமனிதர் தன் வாழ்க்கையையே அறிபணித்திருக்கிறார் என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஆம்   இந்தியாவுக்கு இந்த மருந்தை கொடையளித்த மாமனிதர் வேறுயாருமில்லை  இந்திய வேதியியலின் தந்தை என அழைக்கப்படும் மாமேதை பிரபுல்லா சந்திரா ரேதான் அது.கடந்த  1861 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 2 தேதி பெங்கால் மாகாணத்திற்குட்பட்ட  இன்றைய  பங்களாதேஷில் உள்ள ஜெஸ்ஸோர் மாவட்டத்தில் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தார், ரே , இவரின்  தந்தை ஒரு ஜமீன்தாரி ,  அவரின் தாத்தா திவானாக இருந்தவர் ,  பிரிட்டிஷ் ஆட்சியிலும்  இவரது குடும்பம் செல்வ செழிப்பாக  இருந்தது . வாழ்க்கையில் வளம் இருந்த அளவுக்கு ரே வுக்கு ஆரோக்கியம் அமையவில்லை,     துர்திஷ்டவசமாக   சிறுவயதில்  ரே , பல நோய்களுக்கு ஆளானார்,  ஒருமுறை  தொடர் வயிற்றுப்போக்கால்  மரணித்து போகும் அளவிற்கு ரே உடல் நிலை சென்றது,  பின்னர் அதிலிருந்து மீண்டார், ஆனாலும் தூக்கமின்னை பிரச்சனைக்கு ஆளான அவரால் இளமை பருவத்தில் பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை... பின்னர் நீண்ட  இடைவெளிக்குப் பிறகு  ஆல்பர்ட் பள்ளி இணைந்து பயின்ற அவர்,  பிரசிடென்சி  கல்லூரியில் தனக்கு மிகவும் பிடித்த வேதியல்  பாடப்பிரிவில் இணைந்து படித்தார்,   அதில் தனக்கு இருந்த ஈடுபாட்டின் காரணமாக  தனது வீட்டிலேயே ஒரு ஆய்வு கூடத்தை ஏற்படுத்தினார்.   அதில் சுயமாக பல சோதனைகளை செய்து அவர் பின்னர்  1887ஆம் ஆண்டு எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் டி.எஸ்.சி பட்டம் பெற்றார்,  அங்கு முனைவர் பட்டமும் பெற்றார்,  பின்னர் நாடு திரும்பிய அவர்   எந்த கல்லூரியில் இளங்கலை பயின்றாரோ,  அதே பிரசிடென்சி கல்லூரியில் வேதியியல் பாடப்பிரிவு பேராசிரியராக இணைந்தார் , 


1892 வாக்கில் தன்னிடமிருந்த 700 ரூபாய் மூலதனத்துடன் அவர் வங்காளத்தில் தன் வீட்டில் அமைத்திருந்த ஆய்வு கூடத்தில் பல ஆராய்ச்சிகளை தொடர்ந்தார்,  பின்னர் அந்த கூடத்தை விரிவு படுத்த முயன்றார் ,  அப்போது பல மூலிகைகளின் மூலம் தயாரிக்கப்பட்ட தனது வேதியல் ஆராய்ச்சி முடிவுகளை அப்போதிருந்த இந்தியன் மெடிக்கல் காங்கிரஸ் சமர்பித்த அவர், மருந்து தயாரிக்க ஒப்புதல் பெற்றார்.  பின்னர் 1893 ஆம் ஆண்டு சமர்ப்பித்தார் பின்னர் தன்  விடாமுயற்சியால் பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூட்டிக்கல் வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை  உருவாக்கினார், ஆனால் அவர் உயிருடன் இருந்தவரை அந்த நிறுவனத்திடமிருந்து அவர் ஊதியம் கூட பெற்றுக்கொள்ளவில்லை , பின்னர்  1990 வாக்கில் சுமார் 2 லட்சம் மூலதனத்துடன் அது விரிவாக்கப்பட்டது,    அதை ஒரு பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது,  அப்போது அந்த நிறுவனம் 1908 வாக்கில் வங்காளத்தின் தொழில்துறையில் தனக்கென தனி அடையாளத்தை பெற்றிருந்தது .  கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிறுவனத்தின் தேவை அதிகரித்தது,  பெருமளவில் வளர்ச்சி கண்ட இந்த நிறுவனம் 1905 ஆம் ஆண்டில் கொல்கத்தாவின் மணிக்தாலாவிலும், 1920 ல் பானிஹாட்டியின் வடக்கு புறநகர்ப்பகுதிகளிலும் ,  1938 இல் மும்பையில் கிளைபரப்பியது இங்கு பிரதானமாக மலேரியாவுக்கு மருந்து காலராவுக்கு மருந்து என மருந்து உற்பத்தி வேகமெடுத்தது  இதனால்தான் இந்தியா தற்போது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து உறபத்தியில் கொடிகட்டி பறப்பது மட்டுமல்ல அந்த மருந்து உற்பத்தியின் கேந்திரமாகவே மாறி உள்ளது .  


இதுமட்டுமன்றி பிரபுல்லா சந்திர ரே சுமார் 150 க்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார் ,  இந்து வேதியியலின் வரலாறு ஆரம்பக் கட்டம் துவங்கி 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை இந்தியாவின் பூர்விக வேதியல் நடைமுறைகளை ஆவணப்படுத்த புத்தகத்தையும்  எழுதி வெளியிட்டுள்ளார். மெர்குரஸ் நைட்ரைட். வெவ்வேறு உலோகங்களின் நைட்ரைட்டுகள் மற்றும் ஹைபோனிட்ரைட்டுகள் மற்றும் அம்மோனியா மற்றும் ஆர்கானிக் அமின்களின் நைட்ரைட்டுகள் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார்,  இந்தியாவில்  இது ஏராளமான ஆராய்ச்சிகளுக்கு  வழிவகுத்தது. இந்தியாவின் மருந்து ஆராய்ச்சியில் நாயகனான ரே , ஜூன் 16, 1944 இல் தனது 82 வயதில் மறைந்தார் . 2011 ஆம் ஆண்டு ஆவரது 150 வது பிறந்த நாளில் ஐரோப்பிய யூனியன் சார்ந்த  ராயல் சொசைட்டி ஆஃப் வேதியியல் அதன் விரும்பத்தக்க கெமிக்கல் லேண்ட்மார்க்காக  பிளேக் நேய் ஒழிப்பில் ரே வுக்கு Honor பட்டம் வழங்கி கவுரவித்தது  இந்தியரான நாமும் ரே-வுக்கு வைப்போம் ஒரு ராயல் சல்யூட்.  சல்யூட் ரே...