மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவர் தனது மருமகளை வீட்டிற்கு அழைத்து வர ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவர் தனது மருமகளை வீட்டிற்கு அழைத்து வர ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்டத்தில் உள்ள பத்வான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் தாகாட் என்ற விவசாயி. இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவரின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. ரமேஷ் தாகாட்டுக்கு ஒரே மகன் என்பதால் அவருக்காக ரமேஷ் தாகாட் எப்போதும் ஏதாவது செய்துக்கொண்டே இருப்பார். மகனின் மகிழ்ச்சியே தனக்கு முக்கியம் என்று கூறுவார்.

அவ்வளவு அன்புமிகுந்த மகனின் திருமணத்திற்கு இவர் செய்த ஏற்பாடு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது மகனின் திருமணத்திற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து, தனது மருமகளை ஹெலிகாப்டரில் வீட்டிற்கு அழைத்து வந்தார். மணமகன் யஷ்வந்த் தாகத், தனது மனைவியை அழைத்துச் செல்ல ஸ்கார்பியோவில் செல்ல விரும்புவதாக தெரிவித்திருந்த நிலியில் அவரது தந்தை ஹெலிகாப்டரையே ஏற்பாடு செய்தார். இதனால் மகன் அதிர்ச்சியடைந்தார்.

பத்வான் கிராமத்தில் 25 பிகாஸ் நிலம் வைத்து மளிகை கடை நடத்தி வரும் ரமேஷ் தாகத், ஒரே ஒரு மகனைப் பெற்ற ரமேஷ், தனது மகனின் திருமணத்திற்கு எந்தக் கல்லையும் விட்டு வைக்க விரும்பவில்லை, அதனால்தான் தனது மகனின் திருமண ஊர்வலத்தை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல முடிவு செய்தார். இதுக்குறித்து அவர் பேசுகையில், பெரிய அதிகாரிகளும், அமைச்சர்களும், தலைவர்களும் ஹெலிகாப்டரில் போகும்போது, ஏன் விவசாயி மகன் ஹெலிகாப்டரில் போக முடியாது? என்றார். மேலும் இவ்வளவும் என் மகன், மருமகளின் மகிழ்ச்சிக்காக மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார். இந்த செயல் அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
