விவசாயம் செய்வதற்காக வங்கியில் லோன் கேட்ட விவசாயி ஒருவரிடம், லோன் வேண்டுமென்றால் உன்னோட மனைவியை அனுப்பி வை என்ற கேட்ட வங்கி மேனேஜரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மகாராஷ்ட்ரா மாநிலம் புல்டானா மாவட்டத்தைச் சேர்ந்த பாபு என்ற விவசாயி தன்னுடையே தோட்டத்தில்  கோதுமை பயிரிடுவதற்காக  அப்பகுதியில் உள்ள  சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா  கிளையில் லோன் கேட்டு விண்ணப்பத்துள்ளார். அப்போது அந்த விவசாயி தனது மனைவியையும் வங்கிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது வங்கியின்  மேலாளர் ராஜேஷ் ஹேவாஸ்   , பாபுவின் மனைவியிடம் செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டார். இதையடுத்து அந்த செல்போனில் பாபுவின் மனைவியை தொடர்பு கொண்ட வங்கி மேனேஜர் அவரிடம்  ஆபாசமாகப் பேசி உள்ளார்.

பின்னர் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுள்ளார். மேலும் அந்த மேனஜர் பாபுவின் வீட்டுக்கு பியூனை அனுப்பி  மேலாளர் சொல்கிற படி நடந்து கொண்டால் நன்மை அடையாலாம் எனவும், உடனடியாக லோன் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாபுவும் அவரது மனைவியும்  வங்கி மேலாளர் மொபைலில் பேசிய விவரங்களை பதிவு செய்து போலீசில் புகார் அளித்தனர். மேலாளர் மற்றும் பியூன் மீது  பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.  தற்போது இருவரும் தலைமறைவாகி உள்ளனர்.