farm laws: மத்திய அரசு கொண்டுவந்து, பின்னர் ரத்து செய்யப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு, வேளாண் அமைப்பின் 86 சதவீதம் பேர் ஆதரித்ததாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு கண்டறிந்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்து, பின்னர் ரத்து செய்யப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு, வேளாண் அமைப்பின் 86 சதவீதம் பேர் ஆதரித்ததாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு கண்டறிந்துள்ளது.
ஆதரவு

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், தற்போது உச்ச நீதிமன்றத்தின் குழுவின் விவசாயிகள் ஆதரித்ததாகத் தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் இந்த சட்டத்தை மாநிலங்கள் தேவையான மாற்றங்கள் செய்து, வடிவமைத்து மத்திய அ ரசின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் எதிர்ப்பு
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து விவசாயிகள் டெல்லியின் புறகநகர் பகுதிகளிலும், பஞ்சாப், உ.பி. மாநிலங்களிலும் சாலையில் அமர்ந்து போரட்டம் நடத்தினர். விவசாயிகளுடன் 11 சுற்றுப் பேச்சுகளை மத்திய அரசு நடத்தியும் எந்தத்தீர்வும் கிடைக்கவில்லை.
இந்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டத்தை நடைமுறைப்படுத்த தடை விதி்த்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

அறிக்கை
இந்தச் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி, சேத்கரி சங்காத்னா, சர்வதேச உணவுக்கொள்கை ஆய்வு நிறுவனத்தின் பிரமோத் குமார் ஜோஷி, பூபிந்தர் சிங் மான் ஆகியோரை நியமித்தது. இதில் மான் மட்டு்ம் குழுவிலிருந்துவிலகினார். இந்தத் சூழலில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று பிரதமர் மோடி குருநானக் ஜெயந்தி அன்று மக்களுக்கு அறிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து, விவசாயிகளிடம் கருத்துக்களைக் கேட்டு அறிக்கை தயாரித்துள்ளது. அந்த அறிக்கை விரைவில் பொதுவெளியில் வெளியிடப்பட உள்ளன.
86 % ஆதரவு
அந்த அறிக்கை குறித்து அம்சங்கள் வெளியாகியுள்ளன. அதில், தகராறுகளைத் தீர்ப்பதற்கு சிவில் நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயம், வேளாண் நீதிமன்றங்களை அணுகலாம். கூட்டுறவு மற்றும் வேளாண் உற்பத்தி அமைப்புகள் மூலம் வேளாண் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்தும் குழு உருவாக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் அமைப்பைச் சேர்ந்த 86 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
குழுவின் பரிந்துரைகள்
1. விவசாயிகளின் பேரம்பேசும் திறனை மேம்படுத்த வலிமைப்படுத்த, பொருட்கள் விலை குறித்த தகவல் மையம், சந்தை துல்லியத் தகவல் முறை கொண்டுவரப்பட வேண்டும்.
2. வேளாண் பொருட்கள் விலை குறித்த தகவலை விவசாயிகளுக்கு பரவலாக்க சிஏசிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. ஏற்கெனவே இருக்கும் வேளாண் உற்பத்தி சந்தைக் குழு வேளாண்பொருட்கள் வர்த்தக முனையங்களை உருவாக்க வேண்டும்
4. விவசாயிகளின் நிலம் அபகரிக்கப்படும் என்ற அச்சத்தைப் போக்க தெளிவான தகவல்தொடர்பு அவசியம்
5. ஒப்பந்தத்தில் ஈடுபடும் விவசாயிகள், நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு பாதுகாப்பு அவசியம். ஒப்பந்தம் இரு தரப்பினரின் கையொப்பத்துடந, சாட்சி கையொப்பம் விவசாயிகள் தரப்பிலும், ஒப்பந்ததார் தரப்பிலும் இருக்க வேண்டும்
6. ஒப்பந்த விலையைவிட சந்தைவிலை அதிகரிக்கும்போது, விலையை மாற்றி அமைக்க வழி செய்ய வேண்டும்.
7. அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1995 முற்றிலும் ரத்துசெய்ய வேண்டும்
8. இந்த சட்டத்தால் விரைவில் அழியக்கூடிய பொருட்கள் விலை 100 சதவீதமும், நீண்டகாலம் இருக்கும் பொருட்கள் விலை 50% விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதை முறையே 200% மற்றும் 75%என மாற்ற வேண்டும்
9. 14நாட்களுக்கு ஒருமுறை பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
