Asianet News TamilAsianet News Tamil

Explained : மணிப்பூர் ஏன் போர்க்களமாக மாறியது..? தற்போதைய நிலை என்ன..?

மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக அம்மாநிலம்  போர்க்களமாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

Explained : Why did Manipur become a war zone..? What is the cause of violence..?
Author
First Published May 5, 2023, 12:04 PM IST

மணிப்பூரில் மெய்டீ சமூகத்தின் தங்களை பழங்குடி இனத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு பழங்குடி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 3-ம் தேதி மணிப்பூர் பட்டியலின மாணவ அமைப்பினர் மணிப்பூரில் 10 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி மேற்கொண்டனர். இந்த பேரணியில் திடீரென மோதல் வெடித்ததால் அது கலவரமாக மாறியது. இதில் பல்வேறு வாகனங்கள், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் அம்மாநிலத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது.

இந்த கலவரத்தால் இதுவரை மெய்டீ இனத்தை சேர்ந்த 9,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மணிப்பூரில் கலவரம் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மேலும் மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.                    

இதையும் படிங்க : இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று.. இந்தியாவில் பார்க்க முடியுமா?

பழங்குடியினர் ஆதிக்கம் நிறைந்த சுராசந்த்பூர் மாவட்டத்திலும், காக்சிங் மாவட்டத்தில் உள்ள இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் சுக்னுவின் பல பகுதிகளிலும் ராணுவம் மற்றும் துணை ராணுவ அசாம் ரைபிள்ஸ் கொடி அணிவகுப்புகளை நடத்தியது.

பரவலான கலவரத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை மீண்டும் கலவரம் வெடிக்கும் பட்சத்தில் அதை சமாளிக்கவும் தேவையாக நடவடிக்கைகள் இராணுவம் மேற்கொண்டுள்ளது. மெய்டீஸ் சமூகத்தினரின் எஸ்டி அந்தஸ்து குறித்த கோரிக்கையை நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசுக்கு அனுப்புமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் மாநில அரசைக் கேட்டுக் கொண்டது.

இம்பால் பள்ளத்தாக்கில் ஆதிக்கம் செலுத்தும் மெய்டீஸ், மாநிலத்தின் மக்கள்தொகையில் 53 சதவீதத்தைக் கொண்டிருந்தாலும், பழங்குடியினர் 40 சதவீதமாக உள்ளனர். மியான்மர் மற்றும் பங்களாதேஷில் இருந்து  சட்டவிரோதமாக பலர் மணிப்பூரில் குடியேறி வருவதால் தாங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்வதாக கூறும் சில மெய்டே அமைப்புகளின் எஸ்டி அந்தஸ்துக்கான கோரிக்கையை மணிப்பூர் எம்.எல்.ஏக்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங்கிடம் பேசி மாநிலத்தின் நிலைமையை ஆய்வு செய்தார். வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலத்தின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, மணிப்பூரின் அண்டை மாநிலங்களான அசாம், நாகாலாந்து மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களுடனும் ஷா பேசியுள்ளார்.

இதற்கிடையில், மணிப்பூரில் உள்ள நிலைமை குறித்து ஆளும் பாஜகவை விமர்சித்ததுடன், மாநிலத்தில் அமைதியை மீட்டெடுப்பதில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். 

இந்நிலையில் கலவரத்தில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அருணாச்சல பிரதேசம், மிசோரம் மற்றும் திரிபுரா உள்ளிட்ட பல அண்டை மாநிலங்கள் வன்முறைக்கு மத்தியில் என் பிரேன் சிங் தலைமையிலான அரசுக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன. இதற்கிடையில், மணிப்பூரில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க அருணாச்சல பிரதேசம் ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளது.

மணிப்பூரின் பல மாவட்டங்களில் நடந்த மோதல்களைத் தொடர்ந்து, நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. வடகிழக்கு எல்லை ரயில்வே அடுத்த 48 மணி நேரத்திற்கு மாநிலம் வழியாக அனைத்து ரயில் சேவைகளையும் நிறுத்தியுள்ளது. 

இதையும் படிங்க : சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.. ஆன்லைனில் எப்படி தெரிந்து கொள்வது?

Follow Us:
Download App:
  • android
  • ios