ரயிலில் முன்பதிவு செய்த பயண சீட்டை தொலைத்துவிட்டால் என்ன செய்வது என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. 

ரயிலில் முன்பதிவு செய்த பயண சீட்டை தொலைத்துவிட்டால் என்ன செய்வது என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. ரயிலில் பயணம் செய்ய பயணசீட்டு தேவை. இதனை irctc.co.in என்ற ரயில்வேயின் இணையதளத்திலும் ரயில் நிலையங்களில் நேரிலும் பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைனில் பயண சீட்டை முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்களது மின்னஞ்சலுக்கோ அல்லது மொபைல் போனுக்கோ அவர்களது பயண சீட்டு அனுப்பப்படும். ஆனால் நேரில் சென்று பயணசீட்டை எடுப்பவர்கள் அவர்களது பயணம் முடியும் வரை அதனை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதனை தொலைத்து விட்டால் பயண சீட்டு இல்லாமல் பயணம் செய்ததற்கான அபராதத்தை செலுத்த வேண்டும். இதுவே வழக்கம். தற்போது தங்களது பயண சீட்டை தொலைத்தவர்கள் என்ன செய்வது என்பது குறித்து பார்ப்போம்.

இதையும் படிங்க: பிரிட்டிஷ் ராணுவம் கொன்ற மான்கார் தாம் பழங்குடியினர் - நினைவுச்சின்னமாக அறிவித்தார் பிரதமர் மோடி !!

பயண சீட்டை தொலைந்துவிட்டால் டூப்ளிகேட் டிக்கெட் (Duplicate ticket) எனப்படும் பயண சீட்டீன் நகலைப் பெற்றுக்கொள்ளலாம். அதற்கு ரயில் நிலைய முன்பதிவு கவுன்டரில் தகவல் தெரிவித்து, டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயன்படுத்திய அடையாளச் சான்றைக் காட்ட வேண்டும். அதன் அடிப்படையில் பயண சீட்டீன் நகல் வழங்கப்படும். இதற்கான கட்டணமாக 50 முதல் 100 ரூபாய் வரை செலுத்த வேண்டியிருக்கும். ரயில்வே பயணத்திற்கான chart தயாராவதற்கு முன்பாக நீங்கள் டிக்கெட் நகலைப் பெற்றால், முன்பதிவில்லாத / இரண்டாம் தர வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட் என்றால் 50 ரூபாயும் இதர வகுப்பு டிக்கெட்டுகளுக்கு 100 ரூபாயும் செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க: இந்தியாவில் அறிமுகமாகும் டிஜிட்டல் நாணயம் - ரிசர்வ் வங்கி அசத்தல் அறிவிப்பு !!

ஒருவேளை chart தயார் ஆனதற்குப் பின்னர் பயண சீட்டை தொலைத்து விட்டால் பயணக் கட்டணத்தில் 50 சதவீத தொகையை செலுத்த வேண்டி வரும். அதனை செலுத்தினால் மட்டுமே பயண சீட்டீன் நகலை பெற முடியும். அதேபோல் கிழிந்த அல்லது சேதமடைந்த டிக்கெட் என்றால் நகல் டிக்கெட்டுகளுக்கு 25 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும். இது முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். காத்திருப்போர் பட்டியலில் உள்ள கிழிந்த அல்லது சேதமடைந்த டிக்கெட்டுகளுக்கு நகல் கிடைக்காது. பயண சீட்டின் நகலை பெற்ற பின் ஒரிஜினல் பயண சீட்டு கிடைத்து விட்டால் ரயில் புறப்படுவதற்கு முன்பாக இரண்டு டிக்கெட்டையும் சமர்ப்பித்தால் டிக்கெட் நகலுக்காக செலுத்திய கட்டணத்தில் 5 சதவீதம் அல்லது 20 ரூபாய் பிடித்தது போக மீதி கட்டணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.