என்ஜினியரிங் படிப்புக்கும் பொது நுழைவுத் தேர்வு….மத்திய அரசு அதிரடி திட்டம்…
எம்.பி.பி.எஸ் படிப்பில் சேருவதற்கு நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ஆனாலும் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வுகள் நடை‘பெற்று வருகின்றன.
இந்நிலையில என்ஜினீயரிங் படிப்புகளுக்கும் நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத்தேர்வு முறையை அமல்படுத்துவது என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை முடிவு செய்துள்ளது.
என்ஜினீயரிங் படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடுகளை தடுக்கவும், மாணவர் சேர்க்கையில் வெளிப்படை தன்மையை உருவாக்கவும் பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்ஜினியரிங் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு வரும் 2018–ம் ஆண்டில் இருந்துதான் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
