இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார். 

5 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையம் வந்த அவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து இன்று காலை மத்திய 

அமைச்சர்கள் நிதின் கட்கரி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரை ரணில் சந்தித்து பேசினார். இதற்கிடையே பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் ரணில் விக்கிரமசிங்கே இன்று சந்தித்தார்.

 அப்போது தமிழக மீனவர்கள் விவகாரம், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

பாதுகாப்பு, பொருளாதாரம்,உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்கள் இரு தலைவர்கள் முன்னிலையிலும் கையெழுத்தானது.