Asianet News TamilAsianet News Tamil

சட்டவிரோதமாக சேர்த்த ரூ.50 கோடி சொத்துகள் : அரசு பொறியாளர் கைது!

engineer arrested-7jbemu
Author
First Published Dec 25, 2016, 12:53 PM IST


ஆந்திராவில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு சட்டவிரோதமாக 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சேர்த்த அரசு பொறியாளர் ஒருவரை கைது செய்துள்ளனர். 

பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த மாதம் 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். 

இந்நிலையில் பெருமளவு கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் தங்களிடம் உள்ள பணத்தை சட்டவிரோதமாக வங்கிகளில் செலுத்தி மாற்றி வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, வருமானவரித்துறையினா் நாடு முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு கோடிக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனிடையே ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த அரசு பொறியாளர் Subhash Chandra Patro என்பவருக்கு சொந்தமான வீடுகளில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொன்டனர். சோதனையில் சட்டவிரோதமாக 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சேர்த்தது கன்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் மும்பையில் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios