தெலங்கானா மாநிலத்தின் சேகந்திராபாத் பகுதியில் எலெக்ட்ரிக் பைக் ஷோரூம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஷோரூமில் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு சார்ஜ் செய்து கொண்டிருந்த போது திடீரென்று பேட்டரி வெடித்தது.
ஐதராபாத்தில் எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் பேட்டரி வெடித்து சிதறியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சென்னையை சேர்ந்தவர் உள்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலத்தின் சேகந்திராபாத் பகுதியில் எலெக்ட்ரிக் பைக் ஷோரூம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஷோரூமில் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு சார்ஜ் செய்து கொண்டிருந்த போது திடீரென்று பேட்டரி வெடித்தது. இதனால், தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவி மின்சார வாகனங்கள் வெடித்து தீ மற்றும் புகை பெருமளவில் வெளியேறியது.
இதையும் படிங்க;- Cyrus Mistry: Mercedes-Benz:சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் சிக்கியது எப்படி? மெர்சடீஸ் பென்ஸ் நிறுவனம் அறிக்கை

இந்த தீ விபத்து தொடர்பாக உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததனர். கடும் புகை மூட்டம் காரணமாக ஷோரும் மேலே விடுதியில் தங்கியிருந்த 8 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

இதில், ஒருவர் சென்னையை சேர்ந்த சீதாராமன்(48) என்பவது தெரியவந்தது. பலர் விடுதியில் இருந்து கீழே குதித்தனர். இதில், காயங்களுடன் அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் சேகந்திராபாத் நகரில் தங்கும் விடுதியில் தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- dog:streetdog: ‘தெருநாய் யாரையேனும் கடித்தால், அதற்கு உணவு கொடுப்பவர்களே பொறுப்பு’: உச்ச நீதிமன்றம் கருத்து
