Asianet News TamilAsianet News Tamil

கர்நாடக சட்டமேலவை இடைத்தேர்தல்: ஜூன் 30ல் தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கர்நாடகாவில் காலியாக உள்ள 3 எம்எல்சி என்று அழைக்கப்படும் சட்டமேலவைக்கு ஜூன் 30ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.

Election to fill three vacant MLC posts on June 30
Author
First Published Jun 6, 2023, 11:09 PM IST

கர்நாடக சட்ட மேலவையில் பாஜக உறுப்பினர்களாக இருந்த பாபுராவ் சின்சனசூர், ஆர். சங்கர், லட்சுமண் சவதி ஆகியோர் தங்களாது எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்தனர். இதில் லட்சுமண் சவதி, பாபுராவ் சின்சனசூர் ஆகிய இருவரும்  காங்கிரசில் சேர்ந்து அண்மையில் நடந்த சட்டபேர்வை தேர்தலில் போட்டியிட்டனர்.

இதில் லட்சுமண் சவதி, வெற்றிபெற்று  எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து  கர்நாடக மேல் சபையில் 3 இடங்கள் காலியானது. இந்த நிலையில், காலியான கர்நாடக சட்டப் பேரவையின் மூன்று இடங்களுக்கு ஜூன் 30 ஆம் தேதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தவுள்ளது.

Election to fill three vacant MLC posts on June 30

இதையும் படிங்க..இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேல் சபை பதவிகளுக்கான அறிவிப்பு ஜூன் 13 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 20 ஆம் தேதி. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 21 ஆம் தேதியும், வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஜூன் 23 ஆம் தேதியும் நடைபெறும்.

வாக்குப்பதிவு ஜூன் 30 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்கும் வகையில் நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். கர்நாடக சட்டசபையில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்களும், பாஜகவுக்கு 1 இடமும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க..iPhone 11 வெறும் ரூ.8,950க்கு கிடைக்கிறது! இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது - முழு விபரம் !!

Follow Us:
Download App:
  • android
  • ios