ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இன்று அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட உள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று பகல் 12 மணிக்கு வெளியிட உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணையம் இன்று மதியம் செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சத்தீஸ்கரில் (90 தொகுதிகள்) இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளது, அதே நேரத்தில் ராஜஸ்தான் (200 தொகுதிகள்), மத்தியப் பிரதேசம் (230 தொகுதிகள்), மிசோரம் (40 தொகுதிகள்), தெலுங்கானா (119 தொகுதிகள்) ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 16 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டப்போகுது!
தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களாக தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களுக்குச் சென்று தேர்தல் நடத்துவதற்கான தயார்நிலை குறித்து ஆய்வு செய்துவந்தது. இதன்படி, இன்று மாலை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது. நவம்பர் மாதம் வரும் தீபாவளிக்கு பின் டிசம்பர் இரண்டாவது வாரத்திற்குள் ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 15ஆம் தேதிக்கு முன்பாக நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது. 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன் நடைபெறும் இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மிசோரம் சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் மாநிலக் கட்சியான மிசோ தேசிய முன்னணி ஆட்சியில் உள்ளது.
தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைகிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி ஆட்சி செய்கிறது. மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது.
விற்காத லாட்டரியில் விழுந்த ஒரு கோடி ரூபாய் பரிசு! ஓவர் நைட்டில் கோடிஸ்வரனான லாட்டரி ஏஜெண்ட்!