நாடாளுமன்றத்தில் சிவசேனா கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த அறையை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு வழங்கி மக்களவை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சிவசேனா கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த அறையை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு வழங்கி மக்களவை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால், உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்படும் எம்பிக்களுக்கு அலுவலகம் இல்லாத நிலை ஏற்படும்.
சிவசேனா கட்சியில் மூத்த தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே 40 எம்எல்ஏக்களுடன் போர்க்கொடி தூக்கி கட்சியில் இருந்து பிரிந்தார். இதனால், பெரும்பான்மை இல்லாமல், மகாவிகாஸ் அகாதி கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக துணையுடன்,ஏக்நாத் ஷிண்டே முதல்வராகினார்.

லடாக் கின்னஸ் உலக சாதனை |உறை பனி ஏரியில் மாரத்தான் ஓட்டம் நடத்தி மைல்கல்
அதுமட்டுமல்லாமல் சிவசேனா கட்சியையும், சின்னத்தையும் தங்களுக்கே வழங்கக் கோரியும், தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்றும் தேர்தல்ஆணையத்தில் ஏக்நாத் ஷிண்டே முறையி்ட்டார்.
இதை விசாரித்த தேர்தல் ஆணையம், ஷிண்டேதரப்புக்கு 40 எம்எல்ஏக்கள் ஆதரவும், 13 மக்களவை எம்பிக்கள் ஆதரவும் இருப்பதால், சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் ஏக்நாத் ஷிண்டே தலைமைக்குத்தான் சொந்தம்” என்று அறிவித்தது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் சிவசேனா கட்சிக்கு தனியாக அலுவலக அறை வழங்கப்பட்டுள்ளது. அந்த அறையை தங்களுக்கு வழங்கிட வேண்டும், தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையத்தின் உத்தரவை சுட்டிக்காட்டி ஏக்நாத் ஷிண்டே தரப்பில் ராகுல் ஷீவாலே மக்களவை செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
கடந்த 18ம் தேதி எழுதிய அந்தக் கடிதத்தில் “ உண்மையான சிவசேனா கட்சி நாங்கள்தான். ஆதலால் நாடாளுமன்றத்தில் சிவசேனா கட்சிக்கு முன்பு ஒதுக்கி இருந்த அறையை தங்களுக்கு வழங்கிட வேண்டும் “ எனத் தெரிவித்திருந்தார்.

அதானி, அம்பானி, டாடாவை விட என்னுடைய நேரத்தின் மதிப்பு அதிகம் - பாபா ராம்தேவ் கிளப்பிய புது சர்ச்சை
இந்த மனுவை பரிசீலித்த மக்களவைச் செயலாளர் நாடாளுமன்றத்தில் சிவசேனா கட்சிக்கு ஒதுக்கிய அலுவலக அறையை ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கப்பட்டதாக இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதனால், நாடாளுமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு எம்பிக்களுக்கு அலுவலக அறை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் இருதரப்பினரும் அலுவலகத்தை பயன்படுத்தியநிலையில் இனிமேல் உத்தவ் தாக்கரே தரப்பினர் நுழைய முடியாது.
