EC new decisions and laws

தேர்தலில் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கும் வகையில், அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்யும் நிரந்தர அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதற்கான சட்ட முன்வடிவை தயாரித்து அனைத்து மாநிலங்களின் கருத்துக்கள் அறிய அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, செய்யும் மிகப்பெரிய தேர்தல் சீர்திருத்தமாக அமையும். மேலும், நீண்டகாலமாக தேர்தல் ஆணையம் மத்திய அரசிடம் கேட்ட கோரிக்கையும் நிறைவேறும்.

1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிபி 58(ஏ)ன் படி, சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு, புதிதாக பிரிவு 58(பி) சேர்க்கப்பட உள்ளது. அதில், தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பணம், பரிசுகள் கொடுத்தது உறுதி செய்யப்பட்டால், உடனடியாக தேர்தல் ரத்து செய்யப்படும்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தெரிந்தவுடன் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வருமானவரித்துறையினர் நடத்திய ரெய்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதேபோல, தஞ்சை, அரவக்குறி்ச்சி தொகுதியிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, பின் நடத்தப்பட்டது.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது உறுதியானால், தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் இருக்க வேண்டும் எனக் கோரி மத்திய சட்ட அமைச்சகத்தை தேர்தல் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

சமீபக காலங்களாக நடக்கும் தேர்தலில் முடிவுகளை நிர்ணயம் செய்வதில், பணம் முக்கிய பங்காக இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தில் நடக்கும் தேர்தலின்போதும், வாக்களர்களுக்கு கொடுப்பதற்காக பணம், பரிசுப்பொருட்கள், மது, உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

 ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் மட்டும் ரூ.122 கோடி பறிமுதல் செய்யப்பட்டது, 5 மாநிலத் தேர்தலில் மொத்தம் ரூ.188 கோடி பறிமுதல் செய்யப்பட்டது ஆதலால், தேர்தலில் முடிவுகளை தீர்மானிப்பதில் பணம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால், அதைத்த டுக் வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தது.

இதையடுத்து 951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிபி 58(ஏ)ன் படி, சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான சட்ட முன்வடிவு அனைத்து மாநிலங்களின் கருத்துக்களைக் பெற அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதிதாத திருத்தம் கொண்டுவரப்படும் சட்டத்திருத்தத்தின்படி, அதாவது, புதிய பிரிவு 58(பி)ன்படி, தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பணம், பரிசுகள் கொடுத்தது உறுதி செய்யப்பட்டு, அது தொடர்பாக தேர்தல் அதிகாரி அறிக்கை அளித்தால், உடனடியாக தேர்தல் ரத்து செய்யப்படும். புதிய தேதியில் தேர்தல் நடத்தப்படும்.