EC invites admk teams for all party meeting

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அதிமுகவின் 2 அணிகளுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பாலான மாநிலகளின் கூட்டணி பலங்களுடன் ஆட்சியை பிடித்தது பா.ஜ.க.

இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குபதிவின் போது முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில், மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை திரும்ப பெற்றுக்கொண்டு பழைய வாக்கு சீட்டு முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின.

இதற்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம் மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை எனவும், முடிந்தால் அதை நிரூபித்து காட்டுங்கள் எனவும் தெரிவித்துள்ளது.

இதை நிரூபிக்கும் வகையில் வரும் 12 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது. இதில் அதிமுகவை சேர்ந்த இரு அணிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

முறையாக பதிவு செய்யப்பட்ட கட்சிகள் இதில் கலந்து கொள்ள உள்ளன.

இதனிடையே மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் எளிதில் முறைகேடு செய்ய முடியும் என்று டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சவுரவ் பரத்வாஜ் நேரடியாக செய்து காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.