ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தென்கிழக்கே 30 கிமீ தொலைவில் உள்ள கிஷ்த்வர் என்ற இடத்தில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் முதலில் பாகிஸ்தானில் மதியம் 1.36 மணிக்கு ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் மற்றொரு தகவலில் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம்தான் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதற்கட்ட தகவல்களின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் உள்ள கண்டோ பலேசா கிராமத்தில் இருந்து 18 கிமீ தொலைவில் 30 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து தேசிய தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

Scroll to load tweet…
Scroll to load tweet…