Bihar: இப்படியெல்லாமா இருப்பிங்க! பீகார் சிறையில் போலீஸ் சோதனையின்போது மொபைல் போனை மென்று தின்ற கைதி
பீகார் சிறையில் போலீஸ் சோதனையின் போது, மொபைல் போனை மென்று தின்ற கைதி, வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வினோத சம்பவம் நடந்துள்ளது.
பீகார் சிறையில் போலீஸ் சோதனையின் போது, மொபைல் போனை மென்று தின்ற கைதி, வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வினோத சம்பவம் நடந்துள்ளது.
கோபால்கஞ்ச் மாவட்ட சிறையில் திடீரென அதிகாரிகள் கைதிகளிடம் சோதனை நடத்தி கஞ்சா, செல்போன், ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்வர். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை சிறை அதிகாரிகள் திடீரென கைதிகள் வார்டுக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
சத்தீஸ்கர்| காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கப்பிரிவு ரெய்டு
பீகார் சிறையில் கைதிகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது அதிகாரிகளுக்கு பெரும் கவலையை அளித்தது. இதையடுத்து, அடிக்கடி சோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த 2021ம் ஆண்டு, கத்திஹார், பக்சர், கோபால்கஞ்ச், நாளந்தா, ஹஜிபூர், அரா, ஜெஹனாபாத் சிறைகளில் நடத்திய சோதனையில் 35 செல்போன்கள், 17சார்ஜர்களை கைதிகளிடம் இருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை திடீரென சோதனை நடத்தியபோது, குவாஷிகர் அலி என்ற கைதி போலீஸாருக்குப் பயந்து, தான் வைத்திருந்த செல்போனை கடித்து மென்று தின்றுவிழுங்கிவிட்டார்.
ஆனால், இதன் விளைவு உடனடியாக குவாஷிகர் அலிக்குத் தெரியவில்லை. குவாஷிகர் அலி நேற்று கடும் வயிற்றுவலியால் தடித்தார். இதையடுத்து, உடனடியாக குவாஷிகர் அலியை மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் குவாஷிகர் அலிக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.
குவாஷிகர் அலி வயிற்றில் செல்போனின் துகல்கள், சிப்கள், மதர்போர்டு துகள்கள் என ஏராளமனவை இருந்தன. இதையடுத்து உடனடியாக குவாஷிகர் அலி்க்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் அவரை பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.
ஐஏஎஸ் அதிகாரி ரோஹிணியின் அந்தரங்கப் படங்களை வெளியிட்ட ரூபா ஐபிஎஸ்
இந்த சம்பவம் குறித்து கோபால்கஞ்ச் சிறை கண்காணிப்பாளர் மனோஜ் குமார் கூறுகையில் “ கைதி குவாஷிகர் அலி வயிற்று வலி தாங்கமுடியாமல் தான் செய்தவற்றை அனைத்தையும் போலீஸாரிடம் தெரிவித்தார். உடனடியாக அவரை மாவட்ட மருத்துவமனையில் சேர்த்து எக்ஸ்ரே எடுத்தோம்.
அவர் வயிற்றுக்குள் செல்போன் பாகங்கள் இருந்தன. இதையடுத்து, மருத்துவர் சலாம் சித்திக் அறிவுரையின்படி, உடனடியாக பாட்னா மருத்துவக் கல்லூரிக்குமாற்றிவிட்டோம். அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்
குவாஷி கர் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி, போதை மருந்து தடுப்புப் பிரிவு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, 3 ஆண்டுகளாகசிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Bihar
- Gopalganj district hospital
- Gopalganj district jail
- Qaishar Ali
- bihar news
- gopalganj jail
- inmate
- inmate swallowed a mobile
- jail inmate swallows mobile phone
- mobile in stomach
- mobile phone
- prisoner swallowed mobile
- prisoner swallowed mobile phone
- prisoner swallowed mobile phone in jail
- prisoner swallowes mobile phone
- x-ray