சில்லறை தட்டுப்பாட்டை பயன்படுத்தி, பத்து ரூபாய் நாணயங்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. இவற்றில் போலி நாணயங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.
கடந்த 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால், ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில்லறை தட்டுப்பாட்டைப் போக்க 10 ரூபாய் நாணயங்கள் அதிகளவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. அதில் 2011ம் ஆண்டுக்கான அடையாளம் அறிமுகப்பட்ட குறியீடு இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், 10 ரூபாய் நாணயங்களில் போலியானவை வருவதாக சிலர் வதந்திகளைப் பரப்பி வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து விளக்கமளித்துள்ள ரிசர்வ் வங்கி, ‛வதந்திகளை நம்பாமல் 10 ரூபாய் நாணயங்களைத் தயங்காமல் ஏற்றுக்கொள்ளலாம்' எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு சமயத்திலும் வெளியிடப்படும் நாணயங்களில் அவ்வப்போது உள்ள சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலைகளை வெளிக்காட்டும் வகையிலான அடையாளங்கள் இடம்பெறுவது வழக்கம் என்றும் தெரிவித்துள்ளது.
