புதுடெல்லி, ஜன. 8-

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கான முடிவையும், தேர்வு அட்டவணையையும் அடுத்தவாரத்தில் சி.பி.எஸ்.இ. அறிவிக்கலாம் எனத் தெரிகிறது.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பல்வேறு கட்டங்களாக பிப்ரவரி 4-ந்தேதிதொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை நடக்கிறது.

வழக்கமாக சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1-ந்தேதி தொடங்கி, ஏப்ரல் மாத இறுதியில் முடியும். ஆனால், மார்ச் 8-ந்தேதி வரை தேர்தல், அதன்பின் 11-ந்தேதிவாக்கு எண்ணிக்ைக  நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் தேர்தலோடு, தேர்வுகளையும் நடத்துவது இயலாது என்பதால், ஏறக்குறைய 10 நாட்கள் அதாவது மார்ச் 10-ந் தேதிக்கு பின் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் நடத்தப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சி.பி.எஸ்.இ. வட்டாரங்கள் கூறுகையில், “ 5 மாநிலத் தேர்தல் வருவதால், சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் முதல்தேதி தொடங்குவதற்கு பதிலாக 10 நாட்கள் தாமதமாகத் தொடங்கலாம். அதேசமயம், தேர்வு முடிவுகளைவௌியிடுவதில் எந்தவிதமான தாமதமும் இருக்காது. ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே மாணவர்கள் நன்றாக போதிய கால இடைவெளி அளிக்கப்படும். இறுதி முடிவுகளும், தேர்வு அட்டவணையும் அடுத்தவாரம் வெளியாகும்'' எனத் தெரிவிக்கின்றன.