குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பாஜக மாநிலங்களவை எம்.பி. ரூபா கங்குலியின் மகன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

பாஜக மாநிலங்களவை எம்.பி, ரூபா கங்குலி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர் மகன் ஆகாஷ் முகர்ஜி. இவர் நேற்று இரவு கொல்கத்தா கோல்ஃப் கிரீன் பகுதியில் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். அவர் மதுபோதையில் ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது நிலைதடுமாறிய கார், கோல்ப் கிளப்பின் சுவரில் பலமாக மோதியது. இதில் சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஆகாஷ் முகோபத்யாய்க்கு லேசான காயம் ஏற்பட்டது.

 

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆகாஷ் முகோபாத்யாய் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் உள்பட எந்த சேதமும் ஏற்படவில்லை. மிகவும் அபாயகரமான முறையில் காரை ஆகாஷ் முகோபாத்யாய் ஓட்டி வந்ததாக நேரில் கண்டவர்கள் குற்றம்சாட்டினர்.  

இந்நிலையில், இன்று காலை ஆகாஷ் முகோபாத்யாய் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல பாடகி மற்றும் வங்காள நடிகையான ரூபா கங்குலி, 2015-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஹவ்ரா வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். இதையடுத்து அவர் பாஜக சார்பில்,மாநிலங்களைக்கு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.