உயர் ரகசிய ஆவணங்கள், விஷயங்கள் போன்றவற்றை இணையதளத்தின் மூலம் பகிரக்கூடாது என்று தனது துறை அதிகாரிகள், அலுவலர்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறைஅமைச்சகம் திடீர் கிடுக்கிப்பிடி உத்தரவிட்டுள்ளது.
உயர் ரகசிய ஆவணங்கள், விஷயங்கள் போன்றவற்றை இணையதளத்தின் மூலம் பகிரக்கூடாது என்று தனது துறை அதிகாரிகள், அலுவலர்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறைஅமைச்சகம் திடீர் கிடுக்கிப்பிடி உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், டிஜிட்டல் உதவி கருவிகளான அமேசான் எக்கோ, ஆப்பிள் ஹோம்பாட், கூகுள் ஹோம், அலெக்ஸா, சிரி போன்ற கருவிகளை அலுவலகத்தில் பயன்படுத்தக்கூடாது, அவற்றை ஸ்விட்ஆஃப் செய்ய வேண்டும். ஸ்மார்ட்போனில், வாட்சில் இந்த டிஜிட்டல் அசிஸ்டென்ட் இருந்தாலும் அவற்றை ஆஃப் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கூட்டங்கள், சந்திப்புகள், ஆலோசனைகள் நடத்த அதிகாரிகள் திட்டமிட்டிருந்தால், தங்கள் அறைக்கு வெளியே தங்களின் ஸ்மார்ட் போன்களை வைத்துவிட வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஏராளமான அதிகாரிகள், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்றவற்றை அமைச்சகத்தின் ரகசிய தகவல்களையும், அலுவல்ரீதியான தகவல்களை பகிர்வதற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதையடுத்து, இந்த உத்தரவை மத்திய தகவல்மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
இதுபோன்று வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற பிளாட்ஃபார்ம்களைப் பயன்படுத்துவது தேசிய தகவல் பாதுகாப்பு கொள்கை விதிகள், பாதுகாப்பு வழிகாட்டல்களை மீறியதாகும் என்று அமைச்சகம் எச்சரித்துள்ளது.
துறையின் உச்சபட்ச ரகசிய தகவல்கள், ரகசிய ஆவணங்களை பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டிஆர்டிஓ) உருவாக்கிய வலைதளத்தின் மூலமே பகிர வேண்டும். அரசு வழங்கியுள்ள அதிகாரபூர்வ மின்அஞ்சல், அரசின் மெசேஜ் பிளாட்ஃபார்ம் ஆகியவற்றின் மூலம்தான் பகிர வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

அலுவலகத்தில் உள்ள கணினிகளை பாதுகாப்பாக இருக்குக்கும் வகையில் ஹேக்கிங் செய்ய முடியாதவகையில் முறையான ஃபயர்வால்ஸ், தகவல்தெரிவிக்கும் ஐபி எண் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த விபிஎன் நெட்வொர்க் மூலம்தான் தகவல்கள் பரிமாறப்பட வேண்டும்.
உயர்ரகசிய மற்றும் ரகசிய தகவல்கள், ஆவணங்கள் அனைத்தும் அரசால் உருவாக்கப்பட்ட நெட்வொர்க், எஸ்ஏஜி கிரேடு என்கிரிப்ஷன் மெக்கானிசம் மூலம்தான் பரிமாறப்பட வேண்டும். காணொலி மூலம் கூட்டம் நடத்தவும் இந்த வலைத்தளத்தையே பயன்படுத்த வேண்டும். காணொலி கூட்டத்தின்போதும் ரகசிய தகவல்கள் எதையும் அதிகாரிகள் பகிரக்கூடாது.

வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் கணிகள், மடிகணினிகளில் அலுவலகத்தின் சர்வர்களை, விபிஎன் மூலம் முறையான ஃபயர்வால் செட்அப்புடன் இணைத்து பணியாற்ற வேண்டும். வீட்டிலிருந்து பணியாற்றும்போது, ரகசிய தகவல்கள் எதையும் பகிரக்கூடாது.
இவ்வாறு மத்திய தகவல்மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
