Pakistan cannot execute Kulbhushan Jadhav till the court rules on case ICJ
பாகிஸ்தானின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் சர்வதே நீதிமன்றம் தலையீட்டு நீதிவழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தியர் குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்டு இருந்த மரண தண்டனைக்கு தடைவிதித்து சர்வதேச நீதிமன்றம் நேற்றுதீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்துள்ளது. அந்நாட்டின்வௌியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நபீஸ் ஜகாரியா இஸ்லாமாபாத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியில் அளித்தார். அதில் கூறியதாவது-
எங்கள் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் சர்வதேச நீதிமன்றம் தலையிட்டு நீதி வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியா தனது உண்மையான முகத்தை மறைக்க முயல்கிறது. விரைவில் இந்தியாவின் உண்மையான முகம் உலகின் முன் காண்பிக்கப்படும்.
ஜாதவ் மீது தீவிரவாதம், உளவுபார்த்தல், உள்ளிட்ட பல குற்றங்கள் இரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளன. எங்கள் நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் தலையிட்டு நீதிவழங்க சர்வதேச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்பதை முன்கூட்டியே ெதரிவித்துள்ளோம்.
இந்தியர் குல்புஷனுக்கு எதிராக மிகவும் நம்பத்தகுந்த ஆதாரங்களை நாங்கள் சர்வதேச நீதிமன்றத்தில் அளிப்போம்.
இந்திய அரசே தீவிரவாதத்தை வளர்க்கிறது, நிதியுதவி அளித்து வருகிறது. குல்புஷன் ஜாதவ் விஷயத்தை மனிதநேய அடிப்படையில் கொண்டு சென்று இந்தவிசயங்களை திசைதிருப்ப இந்தியா முயற்சிக்கிறது. எங்கள் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்ற விஷயத்தில் நாங்கள் தௌிவாக இருக்கிறோம். வியன்னா ஒப்பந்தத்தின்படி பிரிவு 36(2) என்ற அடிப்படையில் சர்வதேச நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிடுவது அங்கீகரிக்கப்பட்ட செயல் அல்ல என்று சர்வதேச நீதிமன்றத்தில் எடுத்துரைத்துள்ளோம்’’ எனத் தெரிவித்தார்.
