Asianet News TamilAsianet News Tamil

தங்கத்தைக்கூட பாதுகாக்க வேண்டாம்... இனி இதை பாதுகாத்தே ஆக வேண்டும் இல்லதரசிகளே... உஷார்..!

தங்கத்தின் விலையை விட நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கடும் மனவேதனை அடைந்துள்ளனர். 

Don't even protect gold ... It should be safe anymore
Author
Nasik, First Published Sep 24, 2019, 3:57 PM IST

பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் விவசாயிக்கு சொந்தமான ரூ.1 லட்சம் மதிப்பிலான வெங்காயம் திருடு போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழை மற்றும் வரத்து குறைவால் நாடு முழுவதும் பெரிய வெங்காய விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் ராகுல் பாஜிராவ் என்ற விவசாயி வெங்காய சாகுபடி செய்து சுமார் 25 டன் அளவில் கிடங்கில் சேகரித்து வைத்திருந்தார். Don't even protect gold ... It should be safe anymore

இந்நிலையில், தனது கிடங்கில் சேமித்து வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பெரிய வெங்காயத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, டெல்லியில் மத்திய அரசு சார்பில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.22-க்கு விற்கப்படுவதால் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிகமாக வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது. Don't even protect gold ... It should be safe anymore

தினந்தோறும் சுமார் 2 டன் வெங்காயம் மத்திய தொகுப்பில் இருந்து டெல்லிக்கு அளிக்கப்படுகிறது. உள்ளூர் சந்தை விலை 70-80 ரூபாயாக உள்ள நிலையில் ‘நாஃபெட்’ கூட்டுறவு அங்காடி வாகனங்கள் டெல்லியின் முக்கிய சாலைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.22-க்கு விற்பனை செய்வதால் வாங்குவதற்காக மக்கள் நீண்ட நேரமாக காத்திருந்து வாங்கி செல்கின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios