உத்திரபிரதேச மாநிலத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. பா.ஜ.க கட்சியினர் அங்கு நடைபெறும் ஆட்சியை ராமராஜ்ஜியம் என்று தங்களுக்குள்ளாகவே புகழ்ந்துவருகின்றனர்.

இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் இருக்கும் ஹர்டோய் பகுதியில் இயங்கிவரும், அரசு மருத்துவமனையினுள் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று, வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

அந்த மருத்துவமனையின் பொது நோயாளிகள் தங்கும் பிரிவின் உள்ளே, நாய்கள் படுத்து உறங்குகிறது. நோயாளிகள் தங்கும் அறையில் இது போன்ற சுகாதாரமற்ற நிலையை பார்த்து, ஆதங்கமடைந்த பொதுமக்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் கேள்வி கேட்ட போது, அவர்கள் பொறுப்பின்றி அலட்சியமாக பதிலளித்திருக்கின்றனர்.

தற்போது இந்த பிரச்சனை இணையத்தில் வைரலாகி, சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியிடம் கேள்விகள் வந்து குவிந்தவண்ணம் இருக்கிறது.

கண்டிப்பாக இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு எடுக்கப்படும் என அவரும் பதிலளித்து வருகிறார். இந்த படத்தை பார்த்த நெட்டிசன்களோ, ”இதுவா ராம ராஜ்ஜியம்? நல்லவேளை நாங்க தப்பிச்சோம்” என உ.பி அரசை கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.