உத்தரபிரதேச மாநிலம் கோரப்பூர் மருத்துமனையில் ஆக்ஸிஜன் இல்லாததால் 70 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் தனது சொந்த செலவில் சிலிண்டர்கள் வாங்கி பல குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கஃபீல் கானை அம்மாநில அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததால் 70  பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.அப்படி ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்துகொண்டிருந்த போது, அங்கு பணியாற்றிய டாக்டர் கஃபீல் கான் என்பவர் தன் சொந்த செலவில், தனது காரில் சென்று ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வந்து மேலும் குழந்தைகள் இறக்காமல் காப்பாற்றினார். இவரின் செயலால் மக்கள் அவரை கடவுள் போல பார்க்கின்றனர்.

அப்படி குழந்தைகளை காப்பாற்றி மக்களால் போற்றப்பட்ட டாக்டர் கஃபீல் கானுக்கு அரசு பாராட்டு விழா நடத்தும் என எதிர்பார்த்திருந்த நிலையில்  யோகி ஆதித்யநாத்தின் அரசு அவரை சஸ்பெண்ட் செய்து அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறக்கவில்லை என யோகி  ஆதித்யாநாத் கூறியிருந்த நிலையில், ஆக்சிஜன் வாங்கி கொடுத்து காப்பாற்றிய டாக்டருக்கு பணி இடை நீக்கம்  என் பரிசு தான் கிடைத்துள்ளது.

உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.