ஆனேகல் மற்றும் சர்ஜாபூர் வரை மெட்ரோ நீட்டிப்பு, கிரேட்டர் பெங்களூருவில் ஆனேகல் இணைப்பு, காவிரி நீர் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து துணை முதல்வர் டி.கே. சிவகுமார் முக்கிய 

கர்நாடாகாவில் புதிய திட்டம் : ஆனேகல் தாலுகாவின் ஹென்னகர கிராம பஞ்சாயத்து எல்லையில் கிட்டத்தட்ட 78 பணிகளுக்கான தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு நடைபெற்றது. இந்த விழாவில், துணை முதல்வரும் பெங்களூரு மேம்பாட்டு அமைச்சருமான டி.கே. சிவகுமார் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆனேகல் மற்றும் சர்ஜாபூர் வரை மெட்ரோ நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

கிரேட்டர் பெங்களூரு திட்டத்தில் ஆளுநர் கையெழுத்திட்டுள்ளதாகவும், ஆனேகல் தாலுகா பகுதி கிரேட்டர் பெங்களூருவில் சேர்க்கப்படும் என்றும் சிவகுமார் கூறினார். பெங்களூருவின் விரிவடைந்து வரும் நகர்ப்புற தடத்தில் அனேகலை இணைப்பதற்கு கணிசமான அரசியல் ஆதரவு இருப்பதாக தெரிவித்தார்.

பெங்களூருவோடு ஆனேக்கல்

பெங்களூருவோடு ஆனேக்கலைச் சேர்ப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் கலந்தாலோசித்து கூட்டு முடிவை எடுப்போம் என தெரிவித்தார். மேலும் ஆனேக்கல் பகுதிக்கு காவிரி நீரை வழங்க போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி, முன்னாள் எம்பி டிகே சுரேஷ், உள்ளூர் எம்எல்ஏ பி. சிவண்ணா போன்ற தலைவர்களிடமிருந்து அனேகலை கிரேட்டர் பெங்களூருவுடன் இணைக்க அழுத்தம் வருவதாகவும் கூறினார்.

ஆனேகல் தாலுகாவிற்கு 30 எம்.எல்.டி தண்ணீர்

மேலும் தண்ணீர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள ஆனேகல் தாலுகாவிற்கு 30 எம்.எல்.டி தண்ணீர் வழங்க டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே அனைத்து மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதே வழிவகை செய்வதே எங்கள் நோக்கம் என கூறினார். இது மட்டுமில்லாமல் ஜிகானி, அனேகல், சர்ஜாபூர் மற்றும் பன்னேர்கட்டா வரை மெட்ரோ ரயில் பாதையை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அனேகல் வளர்ச்சிக்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது எனவும் டிகே சிவக்குமார்கூறினார்.